Tuesday, September 22, 2015

பெரு நாட்டில் வள்ளிக் கிழங்கும் முருகனின் வள்ளியும் ...



பெரு நாட்டில் வள்ளிக் கிழங்கும் முருகனின் வள்ளியும் ...

ஐரோப்பியர் கடல் தாண்டி வந்த போது ஈஸ்டர் தீவுகளில்  ஹவாயில் ,நியூ ஜிலந்தில்  வள்ளிக் கிழங்கு பெருமளவில் பயிரிடப்படுவதை கண்டார்கள். அதே கிழங்கு பாலிநேசியர்களின் மற்ற தீவுகளில் பயிரிடப்பட்டது . மேலை நாட்டினர் வள்ளிக்கிழங்கைப் பற்றி அறிந்திருக்கவில்லை. பாலிநேசியர்களின் இச்செடி பற்றிய பல்வேறு குறிப்புகள் உள்ளன . பெரு நாட்டில் இருந்து கட்டுமரத்தில் பசிபிக் பெருங்கடலை கடந்த சூர்ய புத்திரன்  கோன்-திக்கி என்று அழைக்கப்பட்டு தன் பெயரிலேயே கோன் என்ற தமிழ்ச்சொல்லை  பெற்று இருந்த மன்னன் பெரு நாட்டில் இருந்து பாலிநேசியவுக்கு வள்ளிக்கிழங்கை கொண்டு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. 

வள்ளிகிழங்குக்கு மொழி நூல் வல்லுநர் சுட்டிக்காடப்படுவது போல குமாரா என்ற பெயரும் வழங்குகிறது. பெரு நாட்டின் பழைய இந்தியர்களும் குமாரா என்ற பெயராலேயே வள்ளிக்கிழங்கை அழைத்துள்ளனர். ..... இது கோன்-திக்கி பற்றிய மொழிபெயர்ப்பு நூலில் ஆங்கில மொழியில் எழுதப்பட்டதன் தமிழாக்கம் கே.எஸ்.நாகராஜன் அவர்களால் செய்யப்பட்டு ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் சென்னை 1958 ல் இரண்டே ருபாய்  விலையில்    விற்ற நூலின் இடம் பெற்ற  செய்தி. 

உலகளவில் முருகனுக்கு மாநாடுகள் நடத்துவோரும் முருகனைஉ கும்பிடுவோரும்  பெரு நாட்டிலேயே குமரனும்  இருந்துள்ளார், வள்ளிக்கொடி அருகில் பிறந்த வள்ளியும் இருந்துள்ளார். ஆக முருக  வழிபாட்டின் பின் உள்ள வள்ளிக்கிழங்கு வரலாற்றை பெரு நாட்டவரும் தமிழரே, பாலினேசியப்  பழங்குடிகளும் தமிழரே , குமரிக்கண்டத்தின் மைந்தர்களே இவர்கள், உலக மனிதர்கள் தமிழர்களே என்று நிறுவ ஆராயவும் பல ஆங்கில நூல்களை எழுதிக் குவிக்கவும் மூன்றாண்டாக பல நாடு பல்கலைக் கழகங்களின் கதவுகளை தட்டிவிட்டேன். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டு செல்வந்தர்களிடம் கதையும் சொல்லி விட்டேன். பலனில்லை. பவர் பாயிண்ட் மூலம் இங்குள்ள பல்கலைகழக மாணவருக்குச் சொல்லவும் வாய்ப்பு இல்லை. தமிழ்நாட்டின் தொலைக்காட்சிகளிலும் இடமில்லை. நூலாக வெளியிடவும் பதிப்பகங்கள் முன் வர வில்லை. 

No comments:

Post a Comment

அடுத்த 11 வது உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆய்வு செய்ய....

தமிழ் ஆய்வுலகமும் தமிழ்ப் பல்கலைக்கழங்களும் அடுத்த 11 வது  உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆ...