Tuesday, September 22, 2015

பெரு நாட்டை ஆண்ட மன்னன் பெயரில் கோன்


 தென்னமரிக்காவில் பெரு நாட்டில் இங்கா பேரரசு பற்றி நான் தொலைக்காட்சியில் பேசியுள்ளேன். அந்த இங்கா பேரரசை ஏற்படுத்தியவர்கள் அதற்கும் முன்பாக அங்கு வாழ்ந்த பழங்குடிகளான இந்தியரை விரட்டிவிட்டு ஆட்சியை கைப்பற்றினார் கள் . அந்த இந்தியர்கள் கட்டுமரங்களில் ஏறிக்கொண்டு பசிபிக் பெருங்கடலில் சென்று மறைந்ததாக தொல்கதை ஒன்று வழக்கில் உண்டு. அந்த மக்களை வழிநடத்திச் சென்ற தலைவன் பெயர் கோன் டிகி. கோன் டிகி என்ற சொல்லுக்கு  சூர்ய  புத்திரன் என்று பொருள். கட்டுமரம் என்ற சொல்லையே ஆங்கில மொழிக்கு அளித்தவர்கள் தமிழர்களே. அயல்நாட்டவர் ஆக்கிரமிக்கும் முன்பு பெரு நாட்டை ஆண்ட மன்னன் பெயரில் கோன் என்று உள்ளது. அங்கு வாழ்ந்த இந்தியர்கள் கட்டுமரத்தில் பசிபிக் கடலை கடக்க முடியுமா ? இதை ஆராயப் புகுந்த நார்வே நாட்டவரின்  ஆங்கில நூல் : அதன் தமிழாக்கம் ஆசிரியர் நூற்பதிப்புக் கழகத்தால்  1958 ல் ஐந்தாயிரம் படிகள் நீதியரசர் பி.வி.ராஜமன்னார் அணிந்துரையோடு வெளிவந்தது. அதில் உள்ள வியக்கத்தக்க செய்திகள் அவர்கள் தமிழர்களே என்ற முடிவுக்கு நெடிய ஆராய்ச்சியை நான் மேற்கொண்டால் வர முடியும், வந்து மெய்பிக்க முடியும். அந்த கோன் டிகி போன கட்டுமரம் போன்ற ஒன்றை கட்டுவித்து இந்த நார்வே நாட்டவர் பசிபிக் கடலை கடந்த பயண அனுபவங்களை இந்நூல் கூறும். இந்நூலில் ஆராய்ச்சிக்குரிய கருதுகோள்கள் பற்றி சற்று  விரிவாக சொல்ல உள்ளேன். 
1.அந்நூலின் 44 வது பக்கத்தில் கடலைத் தாண்டிச் செல்லும் போது  ஒருவகை செடியின் இலையைக் கொண்டு சென்றனர். அதைக் கடித்துச் சுவைப்பதனால் தாகம் நீங்குமாம். அவ்விலையை பொடி செய்து   ஒரு சிட்டிகை அளவு சேர்த்தால் கடல்நீர் குடிக்கக் கூடிய நீராகுமாம்.  

இது போன்ற பல செய்திகளை ஆய்வு செய்தாக வேண்டும், நான் பெரு நாடு போக வேண்டும். புரவலர்கள் இல்லை. பல்கலைகழங்கள் கதவை தட்டினால் தமிழின் தொன்மை வெளிப்பட்டுவிடுமோ என்று தடைக்கு மேல் தடை. அவர்கள் தமிழர்கள் அல்ல, இந்தியர்கள் என்று எழுதவாவது இந்திய நாடாளும் வர்க்கம் அனுமதிக்குமா ?  

No comments:

Post a Comment

அடுத்த 11 வது உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆய்வு செய்ய....

தமிழ் ஆய்வுலகமும் தமிழ்ப் பல்கலைக்கழங்களும் அடுத்த 11 வது  உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆ...