Saturday, September 26, 2015

என் கடவுளை நான் பார்த்து விட்டேன் என்றாள்


தாத்தா   பெரியார் சாமி  கும்பிட மாட்டாரா என்று நான்கு வயதில்  என் வளர்ப்புப் பேத்தி சுபலட்சுமி கேட்டாள்.  மாட்டார் என்றேன்.அண்ணா சாமி  கும்பிட மாட்டாரா என்றாள் அடுத்து.மாட்டார் என்றேன் ஏன் தாத்தா ? என்றாள் விடாமல். கடவுள் இல்லையடி என்றேன். அப்போ கோவிலில் இருப்பது சாமி இல்லையா என்று வினா தொடுத்தாள்.  அது சிற்பிகள் செதுக்கிய சிலை , சென்னை போகும் போது மகாபலிபுரம் அருகே பார்ப்பாயே என்றேன். அப்போ வீட்டில் இருக்கும் சாமி ? அது ஓவியர்கள் வரைந்த கற்பனை ஓவியம் என்றேன்.

சாமியே இல்லையா என்றாள் விடாமல். கடவுள் இருக்கிறார் , அவரை யாரும் பார்த்தது இல்லை . கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்று பழமொழியே இருக்கு என்றேன்.

சற்று யோசித்தாள். என் கடவுளை நான் பார்த்து விட்டேன் என்றாள் . யார் அது என்று கேட்டேன். நீதான் தாத்தா என் கடவுள் என்று நான்கு வயதில் சொன்ன சுபலட்சுமி போஸே கொடுக்கச் சொன்னால் மூன்று வயதில் பெரியார்-அண்ணா படம் முன் நின்று படம் எடுக்கச் சொன்னாள்.  அந்த அன்பில் கரைந்து போனேன்.

No comments:

Post a Comment

அடுத்த 11 வது உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆய்வு செய்ய....

தமிழ் ஆய்வுலகமும் தமிழ்ப் பல்கலைக்கழங்களும் அடுத்த 11 வது  உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆ...