Friday, November 13, 2015

சித்த மருத்துவக் கலைச் சொல் /மறைமொழிகள் விளக்க அகராதி


தஞ்சை சரசுவதி மகால் ஓலைச்சுவடி 37 ல் பாடல் 422 முதல் 494 வரை யூகிமுனி வைத்திய சிந்தாமணியில் ...... சொல்லப்பட்டுள்ள பிரமியம் 21 வகை ஆகும் . வாதப்பிரமியம் , சேற்றுமப்பிரமியம், கட்டிப்பிரமியம், நாறுதந்தப் பிரமியம்,சீழ்ப்பிரமியம் ,அரித்திரப் பிரமியம் ,கரப்பான் பிரமியம் ,தாதுப் பிரமியம், வலிப்பிரமியம், விரணப் பிரமியம், பித்தப் பிரமியம், வாதப் பிரமியம், தொந்தப் பிரமியம், சலப் பிரமியம், இரத்தப் பிரமியம், ஒழுக்கப் பிரமியம், மூத்திரக் கிரிசிரப் பிரமியம், கல் பிரமியம் , நிச்சப் பிரமியம், மதுப் பிரமியம்,இப்படி சலரோகம் 20 வகை எனவும்,வாதத்தால் உற்பவித்தவை 4 எனவும் பித்தத்தினால் உற்பவித்தவை 6 எனவும் சிலேற்றம் சலரோகம் 10 எனவும் அந்த யூகிமுனி நூல் சொல்லும். இப்படி நோய்களின் குணங்களை விவரிக்கும் நூல்களில் இந்நூலே சிறந்தது என்று தோன்றுகிறது. இந்த நூல்கள் பற்றிப் பேச தமிழ்ப் பேராசிரியர்களை அழைத்தால் அவர்கள் சித்தர் பாடல்களில் உள்ள மருத்துவ உண்மைகளை சொல்லத் தடுமாறுவார்கள். அதனால் தான் குருகுல முறைப்படி சித்த வைத்தியம் பயின்ற நண்பர் விஜயனும் தமிழ்நாட்டில் ஒரு பத்து சித்த மருத்துவர்களும் ஒவ்வொரு நோய்க்கும் உரிய மருந்துச் செய்முறைகளை ஒவ்வொரு கட்டமாக படம் பிடிக்கவும் அதனை விளக்கவும் வேண்டுமெனக் கருதுகிறோம்.சித்த மருத்துவக் கலைச் சொல் /மறைமொழிகள் விளக்க அகராதி உருவாகப் பட வேண்டும் என்பது என் கருத்து. கற்களுக்கும் கனிமங்களுக்கும் கலைச்சொல் அகராதிகள்/கலைக்களஞ்சியங்கள் ஆங்கிலத்தில் உள்ளது போலத் தமிழில் இல்லை .சித்த மருத்துவக் கலைச்சொல் அகராதியை எந்தப் பல்கலைகழகமாவது முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment

அடுத்த 11 வது உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆய்வு செய்ய....

தமிழ் ஆய்வுலகமும் தமிழ்ப் பல்கலைக்கழங்களும் அடுத்த 11 வது  உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆ...