Thursday, November 12, 2015

மறைமொழி மாந்தர்களாக விளங்கி.....சித்த மருத்துவர்கள்

தமிழரின் சித்த மருத்துவம் வடமொழியில் பெயர்க்கப்பட்டு தமிழ் மூல நூல்கள் அழிக்கப்பட்டன என்று தமிழறிஞர்கள் குறை சொல்வார்கள். எவ்வளவு காலம்தான் வடமொழியாளர்களையே குறை சொல்லிக்கொண்டு இருப்பது ?
சொற்பிறப்பியல் ஆய்வறிஞர் ரவி தேவராஜு , தஞ்சையில் உள்ள சரபோஜி மகாராஜா நூலகத்தில் எராளமான வடமொழியாக்கம் செய்யப்பட்ட நூல்களுக்குள் சித்த மருத்துவ உண்மைகள் புதையுண்டு உள்ளன என்றார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஆயுர்வேதம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது ? அந்த நூலை எவராவது வாங்கினீர்களா ? அத்தோடு சித்த மருத்துவ கண்டுபிடிப்புக்களை ஒப்பு நோக்கி உண்மைகளை வெளிக்கொணர ஒரு முனைவருக்கும் மனமில்லை. இந்த நிலையில் ரவி விரும்புவது போல அதை மொழி பெயர்க்க வேண்டும் என்றால் இருமொழிப் புலவர்கள் இருக்கிறார்கள். அவர்களை கொண்டு மொழி பெயர்ப்பது, அதை சித்த மருத்துவத்தோடு ஒப்பிடுவது , தஞ்சையில் உள்ள ஓலைச்சுவடிகளை மின் எண்மம் செய்வது . திறந்த இணைய ஆவணக் காப்பகம் உருவாக்கி அதில் படி ஏற்றி ஊரறியச் செய்வது என்று விழிப்பு உணர்ச்சியைத் தான் நானோ விஜயனோ ரவியோ கனகசபையோ ஏற்படுத்த முடியும். சித்த மருத்துவர்கள் மறைமொழி மாந்தர்களாக விளங்கினார்கள். அதை அனைவரும் அறிய மருந்துச் செய்முறைகளை, யோக விளக்கங்களை உலகத் தொலைக்காட்சிகளில் காட்டச் செய்ய நான் உழைக்கிறேன்.ன் பணியை நான் செய்கிறேன். உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள் , என்னைவிட உங்களால் உழைக்க முடிந்தால் உழையுங்கள். பன்னூறு ஆண்டுகளாக உட்பகையால் அழிந்த தமிழினம் பயன் பெற பாடுபடுங்கள்.   நந்திவர்மன்

No comments:

Post a Comment

அடுத்த 11 வது உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆய்வு செய்ய....

தமிழ் ஆய்வுலகமும் தமிழ்ப் பல்கலைக்கழங்களும் அடுத்த 11 வது  உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆ...