Sunday, August 17, 2014

Nurturing Tamil Togetherness in Cyberspace

Nurturing Tamil Togetherness in Cyberspace
N.Nandhivarman, General Secretary,
Dravida Peravai at Symposium in Pondicherry
10 September 2000

முல்லைக் காடாம் முத்தமிழர் நாட்டின் எல்லை இமயவெற்பை எட்டிப்பிடித்த காலத்தில் எத்திக்கும் புகழ்மணக்க இருந்திட்டப் பழம்பெருமை, இனவெழுச்சியைத் தூண்டப் பயன்பட வேண்டும்.
ஈழத்தை ஆண்டிட்ட இனத்தில் இன்று கோழைத் தமிழர்களாய்க் குன்றி நிற்கும் கொத்தடிமை நினைப்பை ப+ண்டோடு விட்டொழித்தாகல் வேண்டும். கடல்தாண்டிக் கடாரம் கொண்டு தென் கிழக்காசியாவில் திராவிடக்கலைகளைப் பரப்பி வாழ்ந்த இனம் மூவேளைக் குடல் நிரப்பும் முயற்சிக்காக மண்டியிட்டு மாற்றாரிடம் அண்டி நிற்கும் அடிமை நிலையை ஒழித்தாக வேண்டும. சுயமரியாதைக் சுடரேந்தி இம் மண்ணின் மைந்தர்கள் தங்களைப் பிணித்த தளைகளை அறுக்கச் சூளேற்றுச் செயல்பட்டாக வேண்டும்.
வந்தேறிகளுக்கு வால்பிடிக்கும் கூட்டம் மனமாற்றம் பெற்றாக வேண்டும். இனம் ஏற்றம் பெறுவதற்கு தமிழினத்தார் ஓரணியில் திரண்டாக வேண்டும.
கலைஞர் மு. கருணாநிதி ஆசிரியராக விளங்கிய திராவிட முனனேற்றக் கழகத்தின் அதிகாரப+ர்வமான வாரஏடான |நம் நாடு| ஏட்டில் 7.5.1978இல் எழுதிய வரிகள் இன்றும் பொருந்துவதை எண்ணிப்பார்க்கிறேன்.
ஒரணியில் நாம் திரளுவது ஒப்போலை பொறுக்குவதற்கன்று. ஒருவரை ஒருவர் குறை சொல்லி நமக்குள் போட்டுக் கொண்டிருக்கும் மனவேலியை உடைத்தேறியவே நாம் ஒரணியில் திரண்டாக வேண்டும. சாதியின் பெயரால் ஒரணிகள் திரண்டு பேரணிகள் நடக்கின்றன. ஆனால் தமிழின் பெயரால் ஒன்றுபட நாம் தயங்கி கொண்டிருக்கிறோம்.
நாம் ஒரணியில் திரண்டு வாழ்வுக் குறிக்கோளாக மேற்கொள்ளவேண்டிய கொள்கைகள் புதியவையன்று. மொழி ஞாயிறு தேவநேயபாவாணர் தம் வாழ்வின் குறிக்கோளாக கொண்ட முக்கொள்கைகளை நிலைநாட்டவே நாம் ஓன்றுபடவேண்டும்.
1) தமிழ் திராவிடத்திற்குத் தாய்
2) தமிழ் ஆரியத்திற்கு மூலம்.
3) தமிழ் தோன்றிய இடம் -தமிழன் பிறந்தகம்-மறைந்த குமரிக்கண்டம்.
இம்முக்கொள்கைகளுக்காகவே பாவாணர் பட்ட பாட்டை குயில் ஏட்டில்
|நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று
கூவும் அதுவுமோர் குற்றமா?-பாவிகளே!
தேவநே யர்க்குச் செயுந்தீமை செந்தமிழர்
யாவர்க்கும் செய்வதே யாம்|
என்று பாவேந்தர் பதிவு செய்துள்ளார். வரலாற்றை தன் வாழ்நாளில் கண்ணுற்ற, செவியுற்ற கேடுகளைச் சாடி புதுவை வானம்பாடி பதிவு செய்ததுபோல் நாம் அனைவரும் ஈழப்போர் வரலாற்றை பதிவு செய்வதை நம் கடமையாக கொள்ளவேண்டும்.
ஈழப்போரை பாட நமக்கு அச்சம் இருப்பின் ஈழப்போரின் தாக்கத்தால் இங்கு வந்துவிட்ட ஏதிலிகளை பற்றியாவது பாடவேண்டும்.
மதுரையில் இருந்து வெளிவரும் மனித உரிமைக் கங்காணி இதழ் ஈழப் பிரச்சினையின் இன்னொரு பரிமாணம் அதிகரித்து வரும் விதவைகள் பற்றி எழுதுகையில் யுத்தத்தால் சிதைக்கப்பட்டிருக்கும் பொருளாதாரக் கட்டமைப்பிற்குள் தமதும் தம்மைச் சார்ந்த குடும்பத்தவரதும் பிள்ளைகள், முதியவர்கள், உயிர்வாழ்வதலுக்காக, கணவர்கள் இல்லாத ஈழத்தமிழ் பெண்கள் கடுமையாக போராடிக் கொண்டிருக்கினறனர். என கூறுவதையாவது கருத்தில் கொண்டு பெண்ணிய கவிஞர்களாவது பாடியிருக்க வேண்டும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் நிகழ்கின்ற பெண் சிசுக்கொலைகளையாவது பாடியிருக்க வேண்டும்.
சிங்களவ கடற்படையால் சுட்டுகொல்லப்படும் மீனவர்கள் பற்றிப் போராசிரியர் இலெனின் தங்கப்பா பாடலில் பதிவு செய்தார் சாகித்திய அகாடமி விருது பெற்ற வானம் வசப்படும் நாவலில் புதுவை ஆனந்தரங்கர் நாட்குறிப்புச் செய்திகளை பிரபஞ்சன் பதிவு செய்தார். இவை பாராட்டுகட்குரியவை. இவைகளில் இருந்து நாம் ஊக்கம் பெற வேண்டும் தொலைக்காட்சி வழியே. கணினி வழியே தமிழ் பகைவர்கள் மேலாண்மை செலுத்தும் காலத்தே நாம் வாளா இருக்கலாமா?
பாவாணர் சொல்லியது போல்
|வினை பற்றி எனக்கு எல்லா நாளும் வேலைநாள்
விழைவு பற்றி எனக்கு எல்லாநாளும் விடுமுறை நாள்|
என்று எடுத்துக்கொண்டு தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி தமிழ்பகையை முறியடிக்க புதுவையில் பாசறை அமைப்பதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும்.
பாவாணர் நிறுவ விரும்பிய மொழியியல் உண்மையை பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களும் துணிச்சலாக வெளியிட்டுள்ளார்
தமிழ் - இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி
தமிழ் என்ற சொல் சமற்கிருதமயமாக்க்ப பட்ட பிறகு, |தமிதா| என்றும் |தமிளா| என்றும் உருமாறி பிறகு |திராவிட| மாகிவிட்டது. திராவிடம் என்பது அம்மக்களின் மொழியைக் குறிப்பிடுகின்றது: அது அம்மக்களின் இனத்தைக் குறிக்கவில்லை. நாம் நினைவில் கொளள வேணழய மூன்றாவது செய்தி,|தமிழ்| அல்லது |திராவிடம்| என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டும் அன்று: ஆரியர்கள் வருமுன் தமிழ் மொழி இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பேசப்பட்ட மொழியாகும்.
தமிழ் - காசுமீரத்தில் இருந்து குமரி வரையில் பேசப்பட்ட மொழி. இது, உண்மையில் இந்தியா முழுவதும் நாகர்களால் பேசப்பட்ட மொழியாகும்., ஆரியர்கள், நாகர்கள் மீதும் அவர்களின் மொழி மீதும் ஏற்படுத்திய தாக்கம்-வட இந்தியாவில் வாழ்ந்த நாகர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை விட்டு அதற்குப் பதிலாக சமசுகிருத்ததோடு கலந்தனர்.
தென்னிந்தியாவில் இருந்த நாகர்கள், தமிழைத் தங்களின் தாய்மொழியாக்கிக் கொண்டனர்: அவர்கள் ஆரியர்களின் சமசுகிருத மொழியை ஏற்கவில்லை இந்த வேறுபாட்டை நாம் எண்ணிப் பார்த்தால், தென்னிந்தியாவில் வாழும் மக்களை மட்டுமே குறிப்பிட, ஏன் திராவிடர் என்ற பெயரைப் பயன்படுத்தத் துவங்கினார்கள் என்பது புரியும்.
தென்னிந்திய மக்களைக் குறிப்பிட சிறப்பு பெயரான திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுததினாலும - நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனம் என்ற உண்மையை மறந்துவிடக் கூடாது இவ்விரு பெயர்களும் ஒரே இன மக்களையே குறிப்பிடுகின்றன. நாகர்கள் என்பது இனம் அல்லது பண்பாட்டுப் பெயர். திராவிடர் என்பது அவர்களின் மொழியைக் குறிப்பிடும் பெயராகும்.
எனவே தாசர்கள்-நாகர்கள்-திராவிடர்கள் ஓர் இனத்தவரே. வேறு வகையில் கூறவேண்டுமெனில் இந்தியாவில் உள்ள இனங்கள் இரண்டுதான்: ஒன்று ஆரியர்கள் மற்றொன்று நாகர்கள் ( |பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுபபு:7 பக்கம் 300)
இக்கருத்தை கூறிய அம்பேத்கர் அவர்களுக்கு தமிழர்கள் தலைவனக்கம் செய்கிறார்கள்.
ஆரியமதமான இந்துமதத்தை எதிர்த்து பௌத்தமதத்தை தழுவி புரட்சி செய்த அம்பேத்கர் ஆரிய மொழிகளை துறந்து இந்தியா முழுதும் பேசப்பட்ட தமிழ் மொழியை இம்மண்ணின் மைந்தர் அனைவரும் ஏற்க செய்யும் முன் இறந்து விட்டது பேரிழப்பாகும் இருந்தபோதிலும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் சமுக மாற்ற முள்னோடிகள் அப்பணியை செய்து முடிக்க முன் வருவார்கள் என நம்புவோம்.
உலகில் மனிதனின் நாவில் பயிலும் மொழிகளின் எண்ணிக்கை எட்டாயிரத்துக்கும் கூடுதலாகும். சிற்றூர் ஒன்றோடு சிறைப்பட்டுக் கிடக்கும் மொழியுண்டு. ஆற்றுப்படுகை ஒன்றில் மட்டுமே அரசோச்சும் மொழியுமுண்டு. விரல் விட்டு எண்ணக் கூடியோர் வழங்கும் மொழியுமுண்டு. பன்னாடுகளில் பரவி நிற்கும் மொழியுமுண்டு எட்டாயிரம் மொழிகளிலே என்றும் இளமையுடன் நின்று நிலவும் தென் தமிழ் மொழியை பேசிடும் திராவிடப் பெருங் குடிகள் நாமென்பதனால் பெருமைப்படுகிறோம்.
முந்தித் தோன்றி முழுதுலகாண்ட முத்தமிழ் மொழிக்குச் சொந்தக்காரர்கள் சோம்பிக் கிடப்பதால் பிந்தித் தோன்றி பேச்சு வழக்கற்று விட்ட மொழிக்காரர்கள் பேயாட்டம் போடுகிறார்கள். எட்டாயிரம் மொழிகட்கு அதிகமாக இருப்பதாலே மனிதகுலம் பிளவுபட்டுக் கிடக்கிறது. மனிதகுல ஒருமைப்பாட்டை உருவாக்கப் பொது மொழி-புதுமொழி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அறிஞர்களிடத்திலே அரும்பியது. மண் ஒருமைப்பாட்டுக்காக (இந்திய) குரல் கொடுப்போர் இந்த நாட்டில் மனித குல ஒருமைப்பாட்டைப் பற்றி எள்ளளவும் எண்ணுவதே இல்லை.
பொது மொழியாகப் புதுமொழி ஒன்று காண வேண்டும் என்றுதான் மேனாட்டு அறிஞர் பெருமக்கள் எண்ணினார்களே ஒழிய தத்தமது மொழியே தரணியெங்கும் திணிக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை எடுத்து வைக்கவில்லை என்பதை நாம் மறக்க கூடாது. பத்தொன்பதூம் நூற்றாண்டு முதலே உலகப் பொது மொழி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கருத்து அறிஞர்களிடத்தில் வேரூன்றி வநதிருக்கிறது. போலந்து நாட்டுக்காரரான லுட்விக் சான் ஆப் பத்தொன்பதாம் நுர்றறாண்டில் உலகப் பொது மொழியாகத் திகழச் செயற்கை மொழி ஒன்றை படைத்தார்.
எசுபிராண்டோ என்ற அம்மொழி பேசுவோர் 15 மில்லியன் மக்கள் என்றும் இலண்டனில் மட்டும் இம்மொழி அறிந்தோர் தொகை 10,000 என்றும் அம்மொழி ஆய்வாளர்கள் அள்ளித்தரும் புள்ளி விவரங்கள் அறிவிக்கின்றன.
பொறியியல் நாகரிகம் மிகு வளர்ச்சி எய்திவரும் காலத்தில் இப்புது மொழி முயற்சியைத் தோற்கடிக்கக்கூடிய வேறு வழிகளும் மனித குலத்திற்குப் புலப்பட்டுள்ளது.
தானியங்கி (கம்பிய+ட்டர்)கள் பெருவழக்குப் பெற்று வரும் காலத்தில் புது மொழி முயற்சி பின்னடைய நேர்ந்துள்ளதுஃ தானியங்கி மொழியைப் பேசுவோரும் பிறிதொரு மொழியில் உள்ள கருத்தை மொழி பெயர்த்து குறியீடுகள் வாயிலாக அறிந்து கொள்ளுதற்கேற்ற அறிவியல் வழி மனித குலத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
பிரசல்சில் உள்ள ஐரோப்பிய பொருளாதாரக் கழகத்தின் செயலகத்தில் உடனுக்குடன் பல்வேறு மொழி பேசும் உறுப்பு நாடுகளின் படிநிகராளிகட்கு மலைபோல் குவியும் ஆவணங்களை, குறிப்புகளை, சட்டங்களை, கம்பிய+ட்டர் வாயிலாக மொழி பெயர்த்து தர முடிகிறது.
இலக்சம்பர்க்கில் பத்தாயிரம் சொற்களுக்கு இணையான மொழி பெயர்ப்பை ஒரு பொத்தானைத் தொட்டவுடன் ஆறு மொழிகளில் மொழி பெயர்ததளிக்கும் தானியங்கி பராசக்தி அருளால் கண்டு பிடிக்கப்படவில்லை.
காளி தோன்றி சூலாயுதத்தால் நாவில் கீறியதால் இத்தகு அறிவை அந்தத் தானியங்கி பெற்றிடவில்லை உமையாளின் பாலைப்பருகி மூன்று வயதுப் பாலகனான ஞானசம்பந்தர் பாடிய அற்புதம் போன்றது அல்ல தானியங்கி மொழி பெயர்த்தளிக்கும் தன்னிகரில்லா ஏற்பாடு.
மனிதனின் அறிவின் பயனாக இம்மண்.ணுலகு பெற்ற மாபெரும் பயன்களில் ஒன்று தானியங்கி எனலாமே தவிர கடவுளின் கண்டு பிடிப்பாக அதனைக் கருதுதல் இயலாது.
நாமோ ஆயுதங்களைப் ப+சையிடக் கற்றுக் கொண்டிருக்கிறோமே தவிர அற்புதக் கருவிகளை உருவாக்கும் அறிவியல் ஆற்றலைப் பெற்றோமில்லை.
தானியங்கிகளின் ஆற்றலோடு எதிர் நின்று நம் தாய்தமிழை வளர்த்தாக வேண்டிய கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.
26.3.78 நம் நாடு இதழில் நான் எழுதியவை மீண்டும் நினைவுக்கு இன்று வருகிறது. அன்று சொன்ன கடமையை இனியாகிலும் நிறைவேற்ற மொழிப்பற்றுடனே விழிப்புற்றெழுந்து புதுமையில் தமிழறிஞர் படையணி காண்போமா, பண்பாடு காப்போமா என்ற வினாக் குறியோடு உலகத் தமிழினம் இந்தக் கருத்தரங்கை எதிர்நோக்குகிறது.
என் உடலில் ஒடும் குருதி சிகப்பாக மட்டுமே உள்ளதே, கருப்பு சிகப்பாக இல்லையே என அன்றும் இன்றும் என்றும் கவலைப்படுபவன் நான். தமிழினத்தின் எழுச்சிக்கும் தமிழ்ப்பண்பாட்டு மீட்சிக்கும் பயன்பட்டிருக்க வேண்டிய இயக்கத்துக்கு இன்று மஞ்சள் காமாலை நோய் கண்டுள்ளது. ஆட்சி இருந்தும் ஆற்ற வேண்டிய தமிழ்ப் பணிகளை நினைத்துப் பார்க்க நேரமில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் பற்றிய வளைத்தளம், ஜெயின் கமிசன் அறிக்கைக்கு பதில் சொல்வதில் இருந்தே தொடங்குகின்றது. தனது வரலாற்றையே ஒழுங்காகப் பதிவு செய்யாத தமிழகத்தின் ஆளுங்கட்சி தமிழக, தமிழ்மொழி, தமிழினப் பண்பாட்டு வரலாற்றை எவ்வாறு பதிவு செய்யும்?
அரசு செய்யும் என்று காத்திராமல் அறிஞர்கள் தம்மைப் பற்றிய பதிவுகளை உலகளாவிய வலைத்தளத்தில் பதிவு செய்யவேண்டும். நாம் பதிவு செய்யவில்லை என்றால் வரலாறு வேறு விதமாக புனையப்படும். ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில் தமிழகத்தின் மிகச் சிறந்த தமிழறிஞராக தேர்வு செய்யப்பட்ட திரு. கோணங்கி அவர்களின் சிறுகதைத் தொகுதியான |உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை என்ற நூலில் இருந்து ஒரு பத்தி உங்கள் பார்வைக்கு தரப்படுகிறது..
கதாமந்திரப் பரப்பு: வனமந்திர தேவதைச்சுருள்
பழைய பிரதிகள் கதைசொல்ல மறுக்கும் பட்சத்தில் ஞாபகப் பரப்பிலிருந்து விடுபட்டுப் போன வனமந்திர தேவதைச்சுருள் ஆனது வான விளிம்புவரை பரந்து கிடக்கும் நிலம் கடல் ஆறு வழியாக பயணம் செல்லும்போது, மூப்படைந்த அலகும் மாபெரும் சிறகுகளும் கொண்ட கதை சொல்லியாகிய அண்டரண்டாப் பட்சி நினைவால் மர்மமாகச் செதுக்கி லைத்திருக்கும் அற்புத விநோதக் கதைகளால் ஆன வரைபடத்தைப் பின்பற்றிச் செல்லும்போது ஒவ்வொரு தேசங்களின் அடையாளக் கற்களில் அமர்ந்து தன் அலகால் கீறிச் சென்ற கோடுகள் திரும்பத் திரும்ப வந்தமர்ந்து கீறிய கல் வரிகளாகி கதாச்சுருள் சுழன்று கொண்டிருக்கவேண்டும். மனித மிருக ராட்சஸப் பறவையின் கற்பனை மிருக எலும்புளாக மாறக்கூடிய எழுத்தறியாத வனமந்திர தேவதைச் சுருள் ஆனது எப்போதுமே மீண்டும் கதைசொல்லியை வரலாற்றிலிருந்து உயிர்ப்பித்துவிடும்
இந்தக்கதையின் தமிழை நீங்கள் புரிந்து கொண்டால் மட்டுமே இந்திய நாட்டின் சிறந்த தமிழ் நாவல் ஆசிரியரை நீங்கள் புரிந்துக் கொண்டவர்களாவீர்கள். இதுபோன்று தான் வலைதளங்களில் சிறந்த தமிழ் இசைவாணரை, நாடக வல்லுனரை, நாட்டியநங்கையரை, பாவலரை, மொழியியல் அறிஞரை நீங்கள் அடையாளம் காணவேண்டியிருக்கும்
எனவே விழித்து எழுவீர்!
உலகெங்கிலும் உள்ள ஏழு கோடித் தமிழரை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசம் என்ற பெயருடைய வலைதளத்தில் மூவாயிரம் பக்கங்கள் உள்ளன. இந்த மூவாயிர பக்கங்களும் பல்வேறு பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளன
செய்தி மற்றும் செய்தி நிறுவனங்கள் பகுதியில் செய்திக்கோவை, சமாச்சார்-இந்தியச் செய்தி, தமிழீழ செய்திச் சேவை, உதயம் நாளேடு, தினகரன், வீரகேசரி, தென்செய்தி, சுவிடனில் உள்ள தமிழ்த்தகவல் மையம், தினபூமி நாளேடு, எல்.டி.டி.ஈ தமிழ் ஈழச்செய்தி, தமிழ்நெட்(ஆங்கிலம்), தினமணி நாளேடு, ஈழநாட்டுச் செய்திக் குழு, தமிழ் நெட்(தமிழ்), தமிழ் கனடா செய்தி அறை என உட்பகுப்புகளோடு பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த உட்பிரிவில் புதுவையில் இருந்து வெளிவரும் தெளி தமிழ், வெல்லும் தூயதமிழ், நற்றமிழ், தமிழாட்சி, புதுச்சேரியின் குரல், சூழல், அன்றில், தமிழ்ப் பறை, பெரியார் பார்வை, நியு டைம்சு அப்சர்வர் என அனைத்து ஏடுகளையும் இடம்பெறச்செய்வதே நமது இலக்காகும்.
தமிழ் இசைப்பற்றிய பிரிவில் மூன்று உட்பிரிவுகள் உள்ளது. அவை தென்னிந்திய செவ்விசை, வலையில் தமிழ் இசை, மோகன் ஐயரின் கர்னாடக மூலை என்று மூன்று உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன.
தமிழ் இசைவாணர்கள் சீர்காழி கோவிந்தராசன், சிதம்பரம் செயராமன், புட்பவனம் குப்புசாமி, தேனிசை செல்லப்பா, முனைவர் கே.ஏ. குணசேகரன் என்று நீண்டதோர் பட்டியலே உலகலாவிய வலைதளத்தில் இணைக்கப்படவேண்டியுள்ளது.
எல்லாவற்றிக்கும் மேலாக முனைவர் இரா. திருமுருகன் அவர்களின் தமிழ் இசை அறிவை உலகத்தமிழர்கள் உணர்ந்துக்கொள்ளுமாறு செய்வதும் நம்முன் உள்ள பணியாகும்
நாடகம் நாட்டியம் என்றப்பிரிவில் பின்வரும் உட்பிரிவுகள் உள்ளன. கலாச்சேத்திரா, சித்திரா விசுவேசுவரன், வாகினி நிருத்தியாலயா(கனடா) அலர்மேல்வள்ளி, பிரித்தி வாசுதேவன், சோபனா, சிறிராமா(ய+.எசு.எ), இலட்சுமி ராமசாமி, சிறிவித்தியா, பரதகலா ஞ்சலி(சென்னை), சொர்ணமால்யா கணேசு, சுந்தர சாமிநாதன், சரோசா வைத்தியநாதன், அடையார் கே. இலட்சுமணன், பிரியதர்சினிகோவிந்து, சங்கீத நாட்டிய சங்கம், சிவாஜி கணேசன், அனிதாரத்தினம், சிறிநிதி சிதம்பரம் என்று உட்பிரிவுகள் உள்ளன.
இதில் சங்கரதாச சாமிகளுக்கோ, பம்மல் சம்பந்தனார்க்கோ, நவாப்பு ராசமாணிக்கத்துக்கோ, அறிஞர் அண்ணாவுக்கோ இடம் இல்லை. இந்திய நாட்டியத்தின் திராவிட மரபுப்பற்றி நாட்டிய கலாநிதி திருமதி கார்த்திகா கணேசர் என்ற யாழ்பாணத்து ஆய்வாளர் இக்கலை தமிழர்களால் தான் உருவாக்கப்பட்டது என்று நிறுவியுள்ளார். இவரது ஆய்வுரை உலகளாவிய வலைதளத்தில் இடம்பெற திராவிடப் பேரவை உடனடி நடவடிக்கை எடுக்கவுள்ளது.
அவர் எழுதிய தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், காலந்தோறும் நாட்டியக்கலை(இந்தநூல் தமிழ்நாடு முதல் பரிசை பெற்றது) ஆகிய இரு நூல்களையும் உலகத்தமிழர் முன் வைத்து தமிழ்ப் பகையின் தலைகவிழச் செய்வதே இக்கருத்தரங்கின் கடமையாகும்.
சிந்து சமவெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் அன்று என்று பொய்யுரை பரப்பப்படுகிறது. இதற்கு மறுமொழியாக பாவாணரின் அகரமுதலித் திட்டத்தை தொடர்ந்த கோட்டைய+ர் மதிவாணன் அவர்கள் இந்தசு வரிவடிவம் திராவிடமே என ஆங்கிலத்தில் எழுதி மாணவர் நகலகம் வெளியிட்ட நூலையும் உலகத்தமிழர் முன் கொண்டு செல்லல் நம் கடமையாகும்.
பானைசோற்றுக்கு ஒரு சோறு பதம்போல ஒரு வலைதளம் பற்றி சில செய்திகளை மட்டும் இங்கு சுட்டிக் காட்டியுள்ளோம். இன்னும் பல வலைத்தளங்கள் உள்ளன அவற்றை ஆய்வு செய்தால் தமிழ்ப் பகைவர் கோலோச்சுவதை காணமுடியும். அரவிந்தர் இருக்கிறார். அண்ணாவுக்கு இடமில்லை. பெரியாரை பார்க்க முடியவில்லை. ஈ.வெ.இராமசாமி நாயக்கர் இருக்கிறார். காலம் எல்லாம் சாதியை ஒழிக்கப் போராடிய ஒரு தலைவன் சாதிய ஒட்டுப்பெயரோடு தமிழர் வலைத்தளங்களில் இழிவுப்படுத்தப்படுகிறார்
|தலித் முரசு| திங்களேட்டில் ஓவியர் புகழேந்தியின் பேட்டி வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறுகிறார்:
இன்றைக்கு ஈழத்துச் சகோதரிகளின் அழகை போதைக்காக வர்ணிக்க எந்த பேனாவுக்காவது (ஈழத்துக் கவிஞனுக்கும் சரி, தமிழ் நாட்டுக் கவிஞனுக்கும் சரி) துணிச்சல் இருக்கிறதா? வீரம் விளைந்த பெண்மை அது. ஈழத்துச் சகோதரியைப் ப+வோடு ஒப்பிட்டுகூட கவிஞன் பாடமுடியாது. அவர்களை ப+வாகக் காட்ட முனைகிற தூரிகையில் காளான் ப+த்துவிடும்
இதே உணர்வோடு தமிழ்ப் பகைவர் எவரும் தமிழ் மொழியை, பண்பாட்டை, கலையை .இழிவுபடுத்தவிடாமல் நமது கருத்தியல் போரை இன்று இந்நாளில் தொடங்குவோமாக!



No comments:

Post a Comment

அடுத்த 11 வது உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆய்வு செய்ய....

தமிழ் ஆய்வுலகமும் தமிழ்ப் பல்கலைக்கழங்களும் அடுத்த 11 வது  உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆ...