Tuesday, July 15, 2014

நடுத்தெருவில் நந்திவர்மனை கலைஞர் விட்டதாக அண்ணா தி.மு.க ஏடு சமநீதி செய்தி

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த மூன்றே மாதத்தில் என்னை நீக்கினார். சுதேசமித்திரன் ஏட்டில் துணை ஆசிரியராக இருந்த ஹரிஹர சுப்ரமணியன் சொன்னார். செய்தியாளர் சந்திப்பிலேயே புதுவை அமைப்பாளர் அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று எம்.ஜி.ஆர் சொன்னார் என்று. எம்.ஜி.ஆர் நீக்கிய பிறகு எஸ்.டி.சோமசுந்தரம் மீண்டும் சேர்ப்பது பற்றி எம்.ஜி.ஆரிடம் பேசினார். தமிழக துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி வேண்டுமானால் நந்திவர்மானுக்கு தருகிறேன் புதுவை அமைப்பாளர் ஆக்க மாட்டேன் என்றாராம் எம்.ஜி.ஆர். எஸ்.டி.எஸ் தமிழக கொள்கை பரப்பு செயலாளர் அப்போது. ஒருநாள் விரக்தியாக லாயிட்ஸ் ரோட்டில் நடந்து வந்து கொண்டு இருந்தேன். காரில் வந்த முரசொலி மாறன் என்னை கண்டார். வீட்டுக்கு அழைத்து சென்றார். கலைஞரிடம் கூட்டி போனார். மீண்டும் புதுவை அண்ணா தி,மு,க [ தி மு கவின் மாவட்டக் கழகமே அண்ணா தி.மு.க ஆகி இருந்தது] தி.மு.க வில் இணைந்தது. ௧௯௭௪ போது தேர்தலை மாநில அமைப்பாளர் பரூக், பிரச்சரச் செயலாளர் ஆகிய நான், தமிழ அமைச்சர் பண்ருட்டியார் ஆகிய மூவரும் இணைந்து நடத்தினோம். 27 தொகுதிகளுக்கு மூவரும் வேட்பாளர்கள் முடிவு செய்து விட்டோம். பாராளுமன்றத்துக்கு நான் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டேன். காங்கிரசில் ரெட்டியார் வேட்பாளர் என்பதால் முதல் முறையாக சாதி கேட்டு என்னை போட்டியில் இருந்து விலக சொல்லி நாவலர், பண்ருட்டியார், ப.உ.சண்முகம், செ.கந்தப்பன், பரூக், உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் மாநிலங்காவை தருவதாக கலைஞர் வாக்குறுதி அளித்தார். அப்போது அண்ணா தி.மு.க வின் அதிகார பூர்வ ஏடான சமநீதி வெளியிட்ட செய்தி...






No comments:

Post a Comment

அடுத்த 11 வது உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆய்வு செய்ய....

தமிழ் ஆய்வுலகமும் தமிழ்ப் பல்கலைக்கழங்களும் அடுத்த 11 வது  உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆ...